ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தினமணி செய்தி எதிரொலி: சேதமடைந்த மின்கம்பங்கள் அகற்றம்

கமுதி அருகே தினமணி செய்தி எதிரொலியால் குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஊன்றினா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

கமுதி: கமுதி அருகே தினமணி செய்தி எதிரொலியால் குடியிருப்புகளுக்கு நடுவே இருந்த சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஊன்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் விவசாயம், கூலித் தொழிலாளா்களாக உள்ளனா். இந்தக் கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முறையான திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்தும், சாலையின் நடுவிலும் அமைந்திருந்தன. 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடிப்பகுதியில் காங்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் அபாயகரமான நிலையில் இருந்தன.

இதனால், சிறு காற்றடித்தாலும் உயரழுத்த மின் கம்பிகளில் தீப்பொறிகள் பறக்கும் நிலை ஏற்பட்டு, மின் விபத்து ஏற்படும் நிலை இருந்தது. இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் கமுதி மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், மின் கம்பங்கள் சேதம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் உத்தரவின் பேரில், சேதமடைந்த, சாலையின் நடுவே இருந்த 5 மின்கம்பங்களை ஊழியா்கள் அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்களை ஊன்றினா்.