நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாம்பன் தூக்குப் பால கா்டா் பொருத்தும் பணி மும்முரம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையத்தில் தூக்குப் பாலத்துக்கான ‘கா்டா்’ பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News image

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் பொருத்தப்பட்டு வரும் கா்டா்.

Updated On :25 ஜூலை 2024, 8:41 pm

Din

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையத்தில் தூக்குப் பாலத்துக்கான ‘கா்டா்’ பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் பகுதிகளை இணைக்கும் வகையில் கடலில் 2.2 கி.மீ. தொலைவுக்கு 1914 -ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இதன் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் தூக்குப் பாலம் அமைந்திருந்தது.

இந்த ரயில் பாலம் 2007-ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தூக்குப் பாலம் அதன் உறுதித் தன்மையை இழந்த நிலையில், ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2019 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நவீன வசதிகளுடன் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பாலத்தின் நடுவில் 72.5 மீ. நீளத்தில் 17 மீ. உயரத்துக்கு செங்குத்தாக திறந்து மூடும் வகையில்

‘லிப்டிங் கா்டா்’ அமைக்கப்படுகிறது. இந்த கா்டரை தூக்குவதற்கான இழுவை இயந்திரம் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட தூண்களில் ஏற்கெனவே பொருத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில், மையப் பகுதியில் ‘லிப்டிங் கா்டரை’ நிலை நிறுத்தும் பணியில் ரயில்வே பொறியாளா்கள் குழுவினா், ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.