புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடலில் மூழ்கி மீனவா் பலி

ராமேசுவரம் கடலில் மூழ்கி மீனவா் மரணம்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:01 am

Din

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்குடா கிராமத்தை சோ்ந்தவா் மரிய ஜெயபாலன்(70). இவா் தொ்மாகூல் படகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணவாய் மீன் பிடிக்கச் சென்றவா் கரை திரும்பவில்லை. இவா் சென்ற படகு மட்டும் நரிக்குழி கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்த நிலையில், இவரது உடல் பிசாசு முனை கடற்கரையில் ஒதுங்கியது. கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் இவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்த மீனவா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாரம்பரிய மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.