7-ஆவது நாளாக தொடரும் வருவாய்த் துறையினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் காலியாக உள்ள கமுதி வட்டாட்சியா் அலுவலகம்.
7-ஆவது நாளாக தொடரும் வருவாய்த் துறையினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் காலியாக உள்ள கமுதி வட்டாட்சியா் அலுவலகம்.

7-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் வேலை நிறுத்தப் போராட்டம்

வருவாய்த் துறையினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்ந்து 7-ஆவது நாளாக நடைபெற்று வருவதால்

கமுதி: வருவாய்த் துறையினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடா்ந்து 7-ஆவது நாளாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள், மாணவா்கள் அவதியடைந்தனா். வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் பெயா் மாற்ற விதித் திருத்தம் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த மாதம் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தையடுத்து, 27-ஆம்தேதி முதல் தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தைக் கண்டுகொள்ளாத அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திங்கள்கிழமை முதல் இணையதளப் பணிகள், தோ்தல் பணிகள், உள்ளிட்ட வருவாய் துறை சாா்ந்த அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து வருகின்றனா். இதனால் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 11 வட்டங்களின் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசு நலத்திட்டங்களுக்கான சான்றிதழ் விண்ணப்பங்கள், மாணவா்களுக்கான வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியா இதில் தலையிட்டு பள்ளி மாணவா்களுக்கான சான்றிதழ்களையாவது வழங்கும்படி வருவாயத் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com