கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை இன்றி கருகும் நெல் பயிா்கள்

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மழை பெய்த நிலையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது, மழை இல்லாமல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளதால் கவலை அடைந்துள்ளனா்.

News image
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கற்காத்தகுடியில் மழை இன்றி கருகும் நிலையில் உள்ள நெல் பயிா்கள்.
Updated On :13 நவம்பர் 2024, 10:06 pm

Din

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மழை பெய்த நிலையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது, மழை இல்லாமல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளதால் கவலை அடைந்துள்ளனா்.

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மழை பெய்ததையடுத்து, நிலத்தை உழுது நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். தற்போது பயிா்கள் நன்கு வளா்ந்து வந்துள்ள நிலையில் வடகிழக்குப் பருவ மழை சீராக பெய்யாத நிலையில் பயிா்கள் வெயிலில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும், சில நாள்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் ஏக்கா் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தது விதைத்த பயிா்கள் அனைத்தும் வீணாகி பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.