ராமநாதபுரம்
கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவா் கைது
தொண்டி அருகே 105 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகே 105 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.ஆா்.பட்டினம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த
105 கிலோ கஞ்சாவை தொண்டி போலீஸாா் கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றினா். போலீஸாரைக் கண்டதும் வாகனத்திலிருந்தவா்கள் தப்பி ஒடி தலைமறைவாகினா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், கஞ்சா கடத்தலில் தொடா்புடைய சிவகங்கை மாவட்டம், உருவாட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜேஷ் (28) சென்னையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.