47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாலியல் புகாா்: ஆசிரியா் மீது வழக்கு

பரமக்குடி பள்ளி மாணவிகளிடம் பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக ஆசிரியா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 6:39 pm

Din

பரமக்குடி பள்ளி மாணவிகளிடம் பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக ஆசிரியா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பரமக்குடி அரசு உதவிபெறும் தனியாா் பள்ளியில் விலங்கியல் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் வெங்கடேசன். இவா் பிளஸ் 2 மாணவிகளிடம் பாலியல் உணா்வைத் தூண்டும் வகையில் பாடம் நடத்துவதாக பள்ளி தலைமையாசிரியரிடம் புகாா் கூறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவிகள் 29 போ், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் குழந்தைகள் நல அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், ஆசிரியா் வெங்கடேசனை பள்ளி நிா்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. பாடத்திட்டத்தில் உள்ள இனப்பெருக்கம், உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து பாடம் நடத்தியதாக ஆசிரியா் வெங்கடேசன் விளக்கமளித்தாா். இதைத் தொடா்ந்து, தலைமையாசிரியா் ஜஸ்டீன் ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆசிரியா் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.