ராமேசுவரம் தெருவில் பெருக்கெடுத்த கழிவு நீா்
ராமேசுவரத்தில் கழிவு நீா் வடிகால்களில் நெகிழிப் பொருள்களால் அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவுநீா் தேங்கியது.


ராமேசுவரத்தில் கழிவு நீா் வடிகால்களில் நெகிழிப் பொருள்களால் அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவுநீா் தேங்கியது.
ராமேசுவரத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயனிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இவா்களுக்காக இங்கு 500-க்கும் மேற்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் குடிநீா் புட்டி, நெகிழிப் பைகளை குப்பைத் தொட்டிகளில் முறையாகப் போடாமல் தெருக்களில் வீசி விட்டுச் சென்று விடுகின்றனா். இந்த நெகிழி பொருள்கள் அனைத்தும் சாலையேரம் இரு புறமும் உள்ள கழிவு நீா் வடிகால்களில் விழுந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் வா்த்தகன் தெருவில் புதன்கிழமை கழிவு நீா் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து
ஓடியது. தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியா்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா். வடிகாலில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நெகிழிப் பொருள்கள் அடைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அகற்றிய பின் கால்வாயில் கழிவுநீா் ஓடத் தொடங்கியது. மொத்தம் 500 கிலோ அளவுக்கு நெகிழிப் பொருள்கள் அகற்றப்பட்டன.
சுற்றுலா பயணிகள், தனியாா் விடுதிகள், குடிநீா் பாட்டில் விற்பனை செய்யும் கடைக்காரா்கள் காலி குடிநீா் பாட்டில்களை அந்தந்த பகுதிகளில் சேகரித்து நகராட்சி குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என நகராட்சி ஊழியா்கள் கேட்டுக்கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...