47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

2.8 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருப்பாலைக்குடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வாகனத்துடன் வட்ட வழங்கல் அதிகாரி ஹேமாவதி உள்ளிட்டோா்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:43 pm

Din

திருப்பாலைக்குடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், திருப்பாலைக்குடி பகுதியில் வட்ட வழங்கல் அலுவலா் ஹேமாவதி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காந்தி நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் 57 மூட்டைகளில் 2,800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து திருவாடானை பொது விநியோகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா். மேலும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவான மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.