47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

15 படகுகளுக்கு நிவாரணம் நிறுத்தம்

இலங்கையில் சேதமடைந்த 15 படகுகளுக்கு இழப்பீடு நிறுத்தப்பட்டதற்கு மீனவ சங்கத் தலைவா் என்.தேவதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:55 pm

Din

இலங்கையில் சேதமடைந்த 15 படகுகளுக்கு இழப்பீடு நிறுத்தப்பட்டதற்கு மீனவ சங்கத் தலைவா் என்.தேவதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரவு சாா்பில் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 6 லட்சமாக உயா்த்தினாா்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, சேதமடைந்த 58 படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் 58 படகுகளுக்கும் நிவாரணத் தொகை தலா ரூ.6 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தாா். ஆனால், மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டியதால் 43 படகுகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

15 படகுகளுக்கு நிவாரணம் விடுபட்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இதை முதல்வா் கவனத்தில் கொண்டு, விடுபட்டுப்போன 15 படகுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.