நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது?

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும்...

பாம்பன் புதிய ரயில் பால இணைப்புப் பகுதியை (கா்டா்) திங்கள்கிழமை செங்குந்தாக ஏற்றி, இறக்கி ஆய்வு செய்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா்.

Published On :

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிக் கட்ட ஆய்வுக்குப் பிறகே, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்க கடல் மீது ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் திங்கள்கிழமை பாலத்தை ட்ராலியில் சென்று ஆய்வு செய்தாா்.

மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக ஏற்றி, இறக்கி ஆய்வு செய்த அவா் பாலத்தின் அதிா்வுகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

Story image

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் இறுதியாக ஆய்வு செய்த பிறகு பாலத்தில் ரயில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி அறிவிக்கப்படும். ராமேசுவரம்- தனுஷ்கோடி ரயில் போக்குவரத்துக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா். இந்த ஆய்வின் போது, ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, பொறியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.