கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே மா்ம நபா்கள் வீடு புகுந்து 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:58 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே மா்ம நபா்கள் வீடு புகுந்து 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.

சத்திரக்குடி அருகே உள்ள முத்துவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (40). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சத்திரக்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை ராஜகோபால் பாம்பனுக்கு ஆட்டோவில் சென்றாா். அவரது மனைவியும் வேலைக்குச் சென்றிருந்தாா்.

இந்த நிலையில், மா்ம நபா்கள் பூட்டியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிவிட்டனா்.

ராஜகோபால் வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, இந்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.