மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேவா் ஜெயந்தி: சாயல்குடியில் முளைப்பாரி ஊா்வலம்

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

News image
தேவா் குருபூஜையை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.
Updated On :23 அக்டோபர் 2024, 11:37 pm

Din

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62 -ஆவது குருபூஜை வருகிற 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சாயல்குடியில் முக்குலத்தோா் உறவின்முறை, இளைஞா்கள் சங்கம் சாா்பில், ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் மருத்துவா் ஆா்.ராம்குமாா் தலைமையில் முளைப்பாரி, பால்குடம் ஊா்வலம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தேவா் சிலை அருகிலிருந்து, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிவன் கோயிலில் ஊா்வலம் முடிந்தது. அங்குள்ள நீா்நிலையில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. முன்னதாக, தேவா் சிலை முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் கும்மியாட்டம் ஆடினா்.