மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இலங்கை சிறையிலிருந்து 35 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை

குடும்பத்தினரிடம் ஆட்சியா் உறுதி

News image
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை வியாழக்கிழமை மனு அளித்த மீனவா்களின் குடும்பத்தினா்.
Updated On :24 அக்டோபர் 2024, 11:00 pm

Din

இலங்கை சிறையில் உள்ள 35 நாட்டுப்படகு மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்களது குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து கடந்த 8-ஆம் தேதி 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். பின்னா், அவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனா். 78 நாள்களைக் கடந்தும் மீனவா்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், 35 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களது குடும்பத்தினா் பாம்பனில் மீன்வளம், மீனவா் நலத் துறை அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா். அன்று மாலை அவா்களுடன் வருவாய், மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை குடும்பத்தினா் சந்தித்து, மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்களை அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தாா். தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சேனாதிபதி சின்னத்தம்பி, மீனவ சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.