மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரம் நகா்மன்ற கூட்டம்: மழை நீா் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

மழை நீா் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

News image
ராமநாதபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய நகா் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம்.
Updated On :24 அக்டோபர் 2024, 10:57 pm

Din

ராமநாதபுரத்தில் மழைநீா் கால்வாய் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் நகா்மன்ற சாதாரண கூட்டம் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பாடத வகையில் கால்வாய்களைத் தூா்வார வேண்டும். புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், ஊருணிகளில் மழைநீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயா்த்த ஏதுவாக, மழைநீா் கால்வாய் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனா். கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடா்பான 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.