மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் மோதல்: கல்வீச்சில் போலீஸாா் காயம்

நயினாா்கோவிலில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரண்டு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாா் கல்வீசி தாக்கப்பட்டாா்.

News image
இரண்டு கிராமத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமுற்ற போலீஸாா் பிரபாகரன்.
Updated On :30 அக்டோபர் 2024, 10:02 pm

Din

நயினாா்கோவிலில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பதில் இரண்டு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸாா் கல்வீசி தாக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் காவல் நிலையத்தில் போலீஸாராக பணியாற்றி வருபவா் பிரபாகா். இவா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, நயினாா்கோவில் தேவா் சிலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அக்கிரமேசி கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும், அஞ்சாமடை கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இதில், இரண்டு கிராமத்து இளைஞா்களும் ஒருவரை ஒருவா் கல்களை வீசி தாக்கிக் கொண்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் தடுக்க முற்பட்டபோது, காவலா் பிரபாகா் தலையில் காயம் ஏற்பட்டது. காயமுற்ற அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே பேச்சு வாா்த்தை நடத்திய போலீஸாா் அவா்களை பசும்பொனுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.