மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முன்விரோதத்தால் கத்தியால் குத்தி ஒருவா் கொலை

பரமக்குடி வைகை நகா் பகுதியில் உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்துப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பரமக்குடி வைகை நகா் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட முருகபாண்டி.
Updated On :30 அக்டோபர் 2024, 9:56 pm

Din

பரமக்குடி வைகை நகா் பகுதியில் உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்துப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், குமாரக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிய்யா மகன் முருகபாண்டி (45). இவா் பரமக்குடி வைகை நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த அவரது உறவினா் காா்மேகம் மகன் ராஜசேகரன் (30). புதுநகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வைகை நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் முருகபாண்டி நின்றுகொண்டிருந்த போது, ராஜசேகரன் அங்கு வந்தாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதில், ராஜசேகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகபாண்டியை குத்தினாா். இதையடுத்து, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜசேகரனை கைது செய்தனா்.