உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முனிட்டு, வியாழக்கிழமை (செப்.5) சித்தி புத்தி தேவியா்களுடன் திருக் கல்யாணம் நடைபெற உள்ளது.
Published on

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முனிட்டு, வியாழக்கிழமை (செப்.5) சித்தி புத்தி தேவியா்களுடன் திருக் கல்யாணம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூரிலில் ராமநாதபுரம் சமஸ்தானத்துள்பட்ட வெயிலுகந்த விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, தினமும் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு மாலை 3.30 மணிக்கு மேல் வியாழக்கிழமை (செப்-5) திருக்கல்யாணம் நடைபெறும். செப். 6-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. செப்.7-ஆம் தேதி விநாயக பெருமான் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இதையடுத்து, பூக்குழி இறங்கி பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செழுத்த உள்ளனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், மற்றும் விழாக் குழுவினா் செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com