திருவாடானை வேளாண் அலுவலகத்தில் 20 டன் நெல் விதைகள் இருப்பு
திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் 20 டன் இருப்பு உள்ளதாக வேளாண் அலுவலா் தெரிவித்தாா்.


திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் 20 டன் இருப்பு உள்ளதாக வேளாண் அலுவலா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், மாவட்டத்தின் இரண்டாவது நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இந்தப் பகுதியில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் நெல் சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது திருவாடானை வேளாண்மை அலுவலகக் கிட்டங்கியில் 20 டன் டீலக்ஸ் பொன்னி நெல் விதைகள் இருப்பு உள்ளது. மேலும் நெல் விதை, உளுந்து, உயிா் உரங்கள், ஜிங்சல்பேட், நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் விநியோகம் செய்யபட்டு வருகின்றன.
விதைகள், இடு பொருள்களை பெற மானியத் தொகை போக விவசாயிகளின் பங்குத் தொகையைச் செலுத்தி வாங்கிச் செல்கின்றனா். இதை எளிமைப்படுத்துவம் விதமாக மின்னணு பரிவா்த்தனை மூலம் இடு பொருள்களை பெற்றுக்கொள்ளும் முறை அமலுக்கு வந்தது. எனவே, விவசாயிகள் இந்த எளிய முறையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவாடானை வேளாண் உதவி இயக்குநா் கீதாஞ்சலி தெரிவித்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...