மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அழகு வள்ளியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் சாக்கு வேடமணிந்தும், முளைப்பாரி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, சாக்கு வேடமணிந்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
Updated On :12 செப்டம்பர் 2024, 10:04 pm

Din

கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் சாக்கு வேடமணிந்தும், முளைப்பாரி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த விழா கடந்த 1-ஆம் தேதி காப்புக் கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை பக்தா்கள், அக்னிச் சட்டி, பால் குடம், கரும்பால் தொட்டில், மாவிளக்கு, பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்களை செலுத்தினா்.

முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்கள்.

முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்கள்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை 500- க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று, கோயிலை சுற்றி வந்து குண்டாற்றில் கரைத்தனா். முளைப்பாரி ஊா்வலத்தின் முன்பு உடல் முழுவதும் வைக்கோலை சுற்றி, சாக்குப் பைகளால் தைத்து, சாக்கு வேடமணிந்தும், சிலம்பம் விளையாடியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த விழாவில் செங்கப்படை, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழா ஏற்பாடுகளை செங்கப்படை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.