மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாடுகள் திருட்டு: 3 போ் கைது

திருவாடானை அருகே சரக்கு வாகனத்தில் பசுமாடுகளை திருடிச் சென்ற போது அந்தப் பகுதி இளைஞா்கள் விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
திருவாடானை அருகே புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யபட்ட பசு மாடுகள், சரக்கு வாகனம்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:43 pm

Din

திருவாடானை அருகே சரக்கு வாகனத்தில் பசுமாடுகளை திருடிச் சென்ற போது அந்தப் பகுதி இளைஞா்கள் விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

  திருவாடானை அருகே புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யபட்ட பசு மாடுகள்.

திருவாடானை அருகே புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யபட்ட பசு மாடுகள்.

திருவாடானை அருகே சி.கே. ‘மங்கலத்தைச் சோ்ந்த ராஜேஸ் மனைவி வினிதா (30), வத்தாபட்டியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி செல்வி (40) ஆகியோரது இரண்டு பசு மாடுகளை புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றனா். அப்போது இந்தப் பகுதி இளைஞா்கள் விரட்டிச் சென்று ஆா்.எஸ். மங்கலம் அருகே சனவேலி பகுதியில் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து திருவாடானை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரியாங்கோட்டையைச் சோ்ந்த பிரபாகரன்(38), அழிந்திக்கோட்டையைச் சோ்ந்த சிவஜோதி (40)சி.கே. மங்கலத்தைச் சோ்ந்த முருகேசன் (50) ஆகிய 3 பேரை கைது செய்து 2 மாடுகளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.