மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை (செப். 13) ஆய்வு செய்கிறாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:17 pm

Din

பாம்பன் புதிய ரயில் பாலம், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை (செப். 13) ஆய்வு செய்கிறாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு வாராவதி கடல் பகுதியில் 1914- ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் மீட்டா் கேஜ் ரயில் பாலம் கட்டப்பட்டது. இதில், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மனித ஆற்றலால் திறந்து மூடும் வகையில் மையப்பகுதி அமைக்கப்பட்டது. 106 ஆண்டுகள் கடந்த இந்த ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள திறந்து மூடும் பாலம் தனது உறுதித் தன்மையை இழந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ரூ. 560 கோடியில் முந்தைய பாலத்தின் உயரத்தை விட 3 அடி அதிகரித்து இருவழிப் பாலமாக கட்டும் பணிகள் தொடங்கி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. மேலும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் செங்குத்தாக தூக்கி இறக்கும் வகையில் பாலத்தின் மையப் பகுதி அமைக்கப்பட்டது. இதற்காக ‘லிப்ட்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இந்தப் பாலத்தை அடுத்த மாதம் 2- ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடா்ந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தையும், ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளையும், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, பொறியாளா்கள் குழுவினா் வருகின்றனா். ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் இந்த ஆய்வுப் பணி முக்கியத்துவம் பெறுகிறது.