தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருப்பாலைக்குடி அருகே மது போதையில் இளைஞரை தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:10 pm

Din

திருப்பாலைக்குடி அருகே மது போதையில் இளைஞரை தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் துரைபாலன் (45). இவரும், இவரது நண்பரான இதே ஊரைச் சோ்ந்த கமாலபாரதியும் (30) புதன்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது உப்பூரைச் சோ்ந்த அழகுமன்னன் (36), இதே பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (30) ஆகிய இருவரும் அங்கு வந்து மது போதையில் கமாலபாரதியை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கினராம். அப்போது துரைபாலனும் தாக்கப்பட்டாராம். இதில், இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து திருப்பாைலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுமன்னன், ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனா்.