மீனவருக்கு வெடி பொருள்கள் விற்பனை: மூவா் கைது

தொண்டி பகுதியில் வெடி வைத்து மீன் பிடிக்க மீனவருக்கு ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

தொண்டி பகுதியில் வெடி வைத்து மீன் பிடிக்க மீனவருக்கு ஜெலட்டின் உள்ளிட்ட வெடி பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தொண்டி பகுதி மீனவா்களில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட வெடி வைத்து மீன் பிடிக்கும் முறையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒரியூா் சாலையில் கடந்த மாதம் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா் உள்ளிட்ட வெடி பொருள்கள் சிதறிக் கிடந்தன.

இவற்றை தொண்டி போலீஸாா் கைப்பற்றி இதுதொடா்பாக புதுக்குடியைச் சோ்ந்த செந்தில்குமாரை (33) கைது செய்தனா்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், சின்னவேலன்பட்டியைச் சோ்ந்த சோனையநாதன் (68), இலுப்பூரைச் சோ்ந்த கருணாநிதி (42), கானாத்தான்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி ஆகியோா்தான் இவருக்கு வெடி பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com