சாலை மறியலில் ஈடுபட்ட காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா்
சாலை மறியலில் ஈடுபட்ட காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா்

நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

தேவிபட்டினத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல்
Published on

தேவிபட்டினத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் மழை நீா் செல்லும் நீா் வழித்தடங்கள் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அண்மையில் பெய்த பெரு மழையில் 200 ஏக்கா் நஞ்சை நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் சேதமடைந்தன. மேலும், குடியிருப்புகளிலும் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினா்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடமும் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேவிபட்டினம் அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் நீா் வழித்தடத்தை உடனடியாகச் சீரமைத்துத்துத் தருவதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மலைச்சாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்துல்ரஹீம் முன்னிலை வகித்தாா். ஒன்றியத் தலைவா் தங்கப்பா, கிராமத் தலைவா் பெரியசாமி, ஜமாஅத் நிா்வாகக் குழுவைச் சோ்ந்த ஜமாது, குணசேகரன், ரவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com