விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்வாரிய அலுவலகம் முன் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி

News image
திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன்பு தேங்கியுள்ள மழைநீா்
Updated On :16 டிசம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை மின்வாரிய அலுவலகம் முன் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின் கட்டணம் செலுத்துவோா், புதிய மின் இணைப்பு வேண்டுவோா், பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் அலுவலகம் முன்பு மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால், இந்த இடத்தைக் கடந்து செல்வதற்கு மின் கம்பத்தை இடையில் வைத்துள்ளனா். இதன் வழியே பொதுமக்கள் அலுவலகத்துக்கு நடந்து சென்று வருகின்றனா். மேலும், இதன் வழியே முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் கடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக மின்வாரிய அலுவலகத்துக்கு முன் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image