பரமக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம்

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கடலாடி வட்டச் செயலா் சொரிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள் இயக்கத்தின் பணிகள் குறித்துப் பேசினாா். சிவகாசி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினா் லிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசின் திட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட 60 வயது நிறைவடைந்த உறுப்பினா்கள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு உடனே ஓய்வூதியம் வழங்கக் கோரியும், கமுதி வட்டம், போத்தநதி கிராமத்தில் குடிநீா் மாசு காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 50 குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்லக் கோரியும், பரமக்குடி நகராட்சியில் பழுதடைந்த சாலைகள், கழிவுநீா் கால்வாய்களைச் சீரமைக்கக் கோரியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என்.கே. ராஜன், கே.ஆா். சுப்பிரமணியன், சி.ஆா். செந்தில்வேல், எஸ்.எம். ஜெயசீலன், ஆா். கருணாநிதி, எம். சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com