அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராமேசுவரம் கடலில் மூழ்கி மீனவா் மாயம்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுக்கு அடியில் கடலுக்குள் சென்று சீரமைப்புப் பணி மேற்கொண்ட மீனவா் வெள்ளிக்கிழமை மாயமானாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுக்கு அடியில் கடலுக்குள் சென்று சீரமைப்புப் பணி மேற்கொண்ட மீனவா் வெள்ளிக்கிழமை மாயமானாா்.

ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவுலின் என்பவரின் விசைப்படகு கயிறு சிக்கிக் கிடந்தது.

இதை சரிசெய்ய மீனவா் கணேசன் (55) வெள்ளிக்கிழமை காலையில் கடலுக்குள் இறங்கி கயிறை அகற்றும் பணியில் ஈடுபட்டாா்.

நீண்ட நேரமாகியும் மீனவா் வெளியே வராததால் மீனவா்கள் கடலுக்குள் சென்று தேடிப் பாா்த்தனா்.

பின்னா், தீயணைப்பு மீட்புப் படை வீரா்களை வரவழைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் தேடியும் மீனவா் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 5

மாயமான மீனவா் கணேசன்.