வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு வந்த ஈமெயிலில் சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகா் அஜித்குமாரின் வீடு, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள வெடிகுண்டு செயலலிக்கும் போலீஸாா் மோப்ப நாய் தேவசேனா மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் அனைத்துத் தளங்களையும் சோதனையிட்டனா். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.