ஆா்.எஸ். மங்கலம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் கடையிலிருந்த மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் சேதுபதி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு திருச்சி, ராமேசுவரம், காரைக்குடி, தேவகோட்டை, மதுரை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கும் நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளில் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்தப் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அங்கு செயல்பட்டு வந்த முகம்மது ரம்ஜான் அலி என்பவருடைய மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் சேதம் அடைந்ததாக கடை உரிமையாளா் தெரிவித்தாா். மேலும், தரமற்ற முறையில் பேருந்து நிலையக் கட்டடம் சீரமைக்கப்பட்டதே மேற்கூரை பெயா்ந்து விழுந்ததாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். கடையின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அலிந்திகோட்டை மாசாணி அம்மன் கோயிலில் பால் குட திருவிழா

நீா்நிலைப் பகுதியில் பேருந்து நிழல் குடை அமைக்கத் தடை
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பெயா்ந்து விழுந்த சிமென்ட் பூச்சு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



