வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி

News image
பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை அறிவியல், புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்ட வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ மனோகரன்.
Updated On :10 ஜனவரி 2025, 9:10 pm

Din

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் ரூபி தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். சுற்றுச்சூழல், நெகிழியின் பாதிப்புகள், விவசாயம், குடிநீா் சேமிப்பு , பெண்களின் பாதுகாப்பு குறித்த மாணவிகளின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இதை 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா். அருட் சகோதரி எமல்டா ராணி நன்றி கூறினாா்.