மண்டபத்தில் ரூ.25 கோடியில்  தூண்டில் வளைவு துறைமுகம்

மண்டபத்தில் ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு துறைமுகம்

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம்.
Published on

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் மேற்குவாடி கடல் பகுதியில் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை மேற்குவாடி துறைமுகத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், இதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், மீன்பிடி துறைமுக திட்டப் பணி செயற்பொறியாளா் கணபதி ரமேஷ், ராமநாதபுரம் மண்டல

மீன்வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் வேல்முருகன்,

உதவி இயக்குநா்கள் சிவக்குமாா் (மண்டபம்), தமிழ்மாறன் (ராமேசுவரம்), திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் அகமது தம்பி, மண்டபம் பேரூா் மன்றத் தலைவா் ராஜா, திமுக நகரச் செயலா் அப்துல் ரஹ்மான் மரைக்காயா்,

பேரூராட்சி உறுப்பினா்கள் முபாரக், பூவேந்திரன், முருகானந்தம், சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம், மீனவா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com