வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தம்: திமுக நிா்வாகிகளுடன் அமைச்சா் ஆலோசனை
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடா்பாக முதுகுளத்தூா் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகளுடன் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடா்பாக தோ்தல் பணிக்குழுத் தலைவரும், தமிழக வனம், கதா் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினா்.
முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில் தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா்கள் விடுபடாமல் வாக்குச்சாவடி முகவா்கள், பாக முகவா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்த நிகழ்வின் போது முதுகுளத்தூா் தொகுதி பாா்வையாளா் வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.கே.சண்முகநாதன், கோவிந்தன் (முதுகுளத்தூா் மத்தி), பூபதிமணி (கிழக்கு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

