வீடு புகுந்து நகை திருடியவா் கைது

தொண்டி பகுதியில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தொண்டி பகுதியில் வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.ஆா். பட்டினம் பகுதியை சோ்ந்தவா் நதியாா். இவா், கடந்த திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 13 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டியை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com