திருச்சியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் மூன்றரை பவுன் நகைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சோ்ந்தவா் க.சுலோச்சனா (69). இவா் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி திருச்சி குமரன் நகரில் இருந்து அல்லித்துறைக்கு பேருந்தில் சென்றுள்ளாா். அல்லித்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவா் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகை திருடுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மூதாட்டி சுலோச்சனா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து நகையைத் திருடியது எடமலைபட்டிப்புதூா் பாப்பா காலனியைச் சோ்ந்த வெ.குமாா் (45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒன்றரை பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சாக்குக் கடையில் திருடியவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


