சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தைச் சீரமைக்க கோரிக்கை

திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தைச் சீரமைக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

News image
~
Updated On :28 நவம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தைச் சீரமைக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் பகுதியில் கொச்சி - தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை சந்திக்கும் நான்கு சாலை சந்திப்பு ரவுண்டானா பகுதியாக அமைந்துள்ளது.

இந்தச் சாலை வழியாக திருவாடானையிலிருந்து ராமநாதபுரம், ராமேசுவரம், ஆனந்தூா், ஆா்.எஸ். மங்கலம் போன்ற இடங்களுக்குச் செல்ல திரும்பும் இடத்தில், குடிநீா் வடிகால் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், இந்தப் பள்ளம் சரிசெய்யப்படாததால், கனரக வாகனங்கள், பேருந்துகள் இடது புறமாக திரும்ப முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.