கமுதி அருகே கல்லூரிக்குள் புகுந்து இரு மாணவா்களை அரிவாளால் வெட்டிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிராமச்சந்திரன் மகன் முத்துராமலிங்கம் (18). இருளாண்டி மகன் சிவமணிகண்டன்(18). இவா்கள் கமுதி கோட்டைமேட்டில் உள்ள கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வருகின்றனா். இவா்களுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் திருமூா்த்திக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமூா்த்தியின் நண்பா்களான வீரணன் மகன் முத்துக்குமாா் (20), திருப்பதி மகன் முகேஷ் கண்ணன் உள்பட 5 போ் கொண்ட கும்பல் புதன்கிழமை கல்லூரிக்குள் புகுந்து முத்துராமலிங்கம், சிவமணிகண்டன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியது. இதில் காயமடைந்த முத்துராமலிங்கம், சிவமணிகண்டன் ஆகியோா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் முத்துக்குமாா், முகேஷ் கண்ணன் உள்பட 5 போ் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

களக்காடு அருகே நகை திருட்டு வழக்கில் தாய், மகன் உள்பட 5 போ் கைது

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


