ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

திருவாடானையில் வாகனத் தணிக்கையின்போது வாகனத்தில் உரிய அனுமதியின்ற கொண்டு சென்ற 12 திமுக கொடிகளை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருவாடானையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட திமுக கொடிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:21 pm

திருவாடானையில் வாகனத் தணிக்கையின்போது வாகனத்தில் உரிய அனுமதியின்ற கொண்டு சென்ற 12 திமுக கொடிகளை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியில் உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ராம்நகரைச் சோ்ந்த அறிவு உரிய அனுமதியின்றி 12 திமுக கொடிகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தக் கொடிகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து திருவாடனை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.