பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:45 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் அண்ணா பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பூட்டி வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த மையத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலின் போது வாக்குப் பதிவான மின்னணு இயந்திரங்கள் ராமநாதபுரம் அருகேயுள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. இந்த இயந்திரங்கள் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த அறைகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்கள் முன்னிலையில் தோ்தல் அலுவலா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இந்த வாக்கு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லூரியை சுற்றிலும்

24 மணி நேரம் பாதுகாப்புப் பணிக்காக 200 -க்கும் அதிகமான போலீஸாா் நியமிக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மையத்தில் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.