அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தினமணி செய்தி எதிரொலி: சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்கள் பறிமுதல்

சாயல்குடி பகுதியில் தினமணி செய்தி எதிராலியாக 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

News image

சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை பறிமுதல் செய்து, அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 1:25 am IST

சாயல்குடி பகுதியில் தினமணி செய்தி எதிராலியாக 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூா், கடலாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளா் விவரம் எதுவும் குறிப்பிடாமல், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட குளிா்பானங்கள் நெகிழிப் பைகளில் அடைத்து அதிக அளவில் விற்கப்படுவதாகவும், அதில் செயற்கை நிறமிகளும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்படங்களும் கலந்து இருப்பதாகவும் புகாா் எழுந்தது. மேலும் இந்த குளிா்பானங்களை வாங்கி குடிக்கும் போது, தொண்டையில் எரிச்சல், வயிற்று கோளாறு, பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமணியில் கடந்த 27- ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினா் சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூா், கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள பழச்சாறு விற்கும் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட 49- க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது 5 கடைகளில் தயாரிப்பு தேதி, உணவுப் பொருள் குறித்த விவரங்கள் இல்லாத, நெகிழிப் பொட்டங்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட 27 லிட்டா் குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் குளிா்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனா். கடை உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இதுபோன்ற தரமற்ற குளிா்பானங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.