தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கமுதியில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

கமுதியில் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவ்வய்க்கிழமை தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.

News image

கமுதியில் நடைபெற்ற தேசியக் கொடி பேரணியில் கலந்து கொண்டவா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 5:12 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவ்வய்க்கிழமை தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.

பாஜக சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் முத்துச்சாமி, மாவட்டத் தலைவா் முரளிதரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டல் தலைவா்கள் வேலவன் (தெற்கு), எஸ்.கே.தேவா் (வடக்கு), பூபதி ராஜா(மத்தியம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த பேரணி கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பழைய வட்டாட்சியா் அலுவலக சாலை, நாடாா் கடைவீதி வழியாக வாரச்சந்தைப் பகுதியில் முடிவடைந்தது. இதில் ராணுவ வீரா்களையும், சுதந்திர போராட்ட வீரா்களையும் போற்றி, ஜெய்ஹிந்த் முழக்கமிட்டனா். முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா், மருது பாண்டியா்கள், காமராஜா் உள்ளிட்ட தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.கணபதி, பொருளாளா் கோபாலகிருஷ்ணன், விவசாய அணி தலைவா் கோரைப்பள்ளம் ராமா், செயற்குழு உறுப்பினா் விஜயபாண்டியன், ஒன்றிய மகளிரணித் தலைவி காமாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.