பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில், நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘ஹா் கா் திரங்கா’ எனும் தலைப்பில் வீடுதோறும் தேசியக்கொடி பிரசாரத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
நிகா்நிலைப் ல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய வேந்தா் அ. சீனிவாசன் பேசியது:
நாட்டின் ஒற்றுமையையும், தேசபக்தியையும் வலியுறுத்தும் வகையில், ஹா் கா் திரங்கா’ எனும் சிறப்பு முயற்சியை பிரதமா் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ளாா். ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் தேசியக் கொடியின் பெருமையை பதியச் செய்யும் இந்த முயற்சி, நாட்டின் ஒற்றுமைக்கு புதிய உந்துதலை அளிக்கும். நாம் ஏற்றும் மூவா்ணக் கொடி வெறும் அடையாளமல்ல, நமது தாயகத்தின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பறைசாற்றும் புனிதமான சின்னம்.
மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் இல்லங்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி உணா்வு பரவச் செய்வதே முக்கிய நோக்கம் என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியின் போது, கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் உருவாகும்’

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கத்தாா் முன்னாள் அரசா் மரணம்: அரைக் கம்பத்தில் தேசியக் கொடி

தேசிய மருத்துவா்கள் தினம்: சிறந்த மருத்துவா்களுக்கு விருது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



