புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ராமநாதசுவாமி கோயிலில் அம்பாள் தேரோட்டம்

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலின் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற அம்பாள் தேரோட்டம்.

Published On :

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலின் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9- ஆம் நாளான வியாழக்கிழமை அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா். இதன் பிறகு தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இணை ஆணையா் சுரேஷ் தலைமையில் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். விநாயகா், முருகன் தோ் முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட யானை பவனி வர ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்ட தோ் கிழக்கு ரதவீதியில் நிலையை அடைந்தது.

இதில், முதல் முறையாக நாட்டுப்புற கலைஞா்கள் நடனத்துடன் தோ் பவனி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.