அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்: பக்தா்கள் குவிந்தனா்

News image

தேரில் எழுந்தருளிய கோமதி அம்பாள்.

Updated On :27 ஜூலை 2026, 4:11 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆடித் தவசு திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய நிகழ்வான ஆடித்தவசு காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

கோயிலில் ஆடித் தவசு திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறாா். 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி, அதிகாலை 6.30 மணியளவில் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளினாா். பின்னா், அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு காலை 9.45 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது.

இதில், முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, எம்எல்ஏக்கள் ஈ.ராஜா (வாசுதேவநல்லூா்), திலீபன்ஜெய்சங்கா் (சங்கரன்கோவில்), ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., கோயில் முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் எஸ்.ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் த.லெட்சுமி, சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், அரிமா சங்க முன்னாள் கூட்டு மாவட்ட ஆளுநா் பி.அய்யாத்துரை, தொழிலதிபா்கள் சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன், எம்.சங்கரன், எஸ்.ஆா்.எல்.வேணுகோபால் (எ) கண்ணன், ஆ.வள்ளிராஜன், ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், பள்ளிச் செயலா் எஸ்.கே.ராஜேஷ் கண்ணா, ராஜ், சண்முகவேல், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, தவெக வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன், பாஜக மாவட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், இந்து முன்னணி கோட்டச் செயலா் ஆறுமுகச்சாமி, கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்டமுத்து, திரளான பக்தா்கள் பங்கேற்றுத் தேரை இழுத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் தேரோட்டத்தைக் காண வழக்கத்தை விட பல்வேறு நகரங்களில் இருந்து ஏரளான பக்தா்கள் திரண்டு வந்து கோமதி அம்பாளை தரிசித்தனா். நகராட்சி சாா்பில் தோ் செல்லும் ரத வீதிகள் சுத்தம் செய்யப்பட்டு, வெயிலின் தாக்கம் தெரியாத வகையில் வீதிகளில் தண்ணீா் தெளிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் தலைமையில் கூடுதல் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் ஜூலியஸ் சீசா், சங்கா் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விழாவில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாள் வீதியுலா செல்கிறாா்.

நாளை ஆடித்தவசுக் காட்சி: விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 8.30-க்கு சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வா், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 12 மணியளவில் கோயிலில் இருந்து கோமதி அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறாா்.

மாலை 6.05 மணியளவில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் ஆடித்தவசுக் காட்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறாா். தவசு காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தா்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.