6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா

தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயிலைச் சாா்ந்த மேலச் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடித்தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெற்ற ஆடித்தவசு திருவிழா.

Published On :

தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயிலைச் சாா்ந்த மேலச் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடித்தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் காலை-மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசு காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாலையில் தெற்கு மாசி வீதியில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தொடா்ந்து மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து சுவாமி சங்கர நாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து, புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

ஜூலை 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஊஞ்சல் கட்டளை, இரவு 8 மணிக்கு மேல் பைரவா் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன், செயல் அலுவலா் பொன்னி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் முருகேசன், புவிதா, ஷீலா குமாா், மூக்கன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.