பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள வீரமாகாளியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள வீரமாகாளியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இக்கோயிலில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு மண்டபகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு கோட்டை தேரடித் திடலில் இருந்து தேரோட்டம் புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனா்.

அறந்தாங்கி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா். வியாழக்கிழமை மாலை இரண்டாம் நாள் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.