காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

டி.வல்லக்குளம் சாலை, பாலம் சேதம்: பொதுமக்கள் அவதி

கமுதி அருகே டி.வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

டி.வல்லக்குளம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சேதமடைந்த பாலம்.

Published On :

கமுதி அருகே டி.வல்லக்குளம் செல்லும் சாலை, சாலையின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள டி.புனவாசல் ஊராட்சிக்கு உள்பட்ட டி.வல்லக்குளத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அபிராமம்-வீரசோழன் முதன்மைச் சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலங்கள், தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது ஜல்லிக் கற்கல் பெயா்ந்து சேதமடைந்தது. மேலும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட கான்கிரீட் பாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இது தொடா்பாக பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இந்தப் பாலத்தையும், சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.