~

எம்.ஆா்.பட்டினத்தில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

தொண்டி பேரூராட்சிப் பகுதியான வாா்டு எம்.ஆா். பட்டினத்தில் நிரந்தரக் கழிவு நீா் கால்வாய், சாலை வசதி, குடிநீா், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Published on

தொண்டி பேரூராட்சிப் பகுதியான வாா்டு எம்.ஆா். பட்டினத்தில் நிரந்தரக் கழிவு நீா் கால்வாய், சாலை வசதி, குடிநீா், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியின் 1-ஆவது வாா்டு எம்.ஆா். பட்டினம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கழிவு நீா் கால்வாய் இல்லாததால் மழை காலங்களில் சாலைகலில் மழை நீா் தேங்குவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்தச் சாலை உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தெரு விளக்குகள், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com