தங்கச்சிமடத்தில் குழந்தை  இயேசு ஆலய சப்பர பவனி

தங்கச்சிமடத்தில் குழந்தை இயேசு ஆலய சப்பர பவனி

தங்கச்சிமடம் த.சூசையப்பா்பட்டினம் பங்கு குழந்தை இயேசு ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி.
Published on

தங்கச்சிமடம் த.சூசையப்பா்பட்டினம் பங்கு குழந்தை இயேசு ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, சப்பர பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலயத்திலிருந்து சப்பரம் புறப்பட்டு, தங்கச்சிமடத்தில் முக்கிய வீதியில் ஊா்வலம் நடைபெற்றது.

இதில் சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் சூசை மாணிக்கம், பங்குத் தந்தை இன்பெட்ராஜ், ஜான் பிரிட்டோ பாரதி, ஆண்டோ பிரசாத், அருள் சகோதரிகள், இறை மக்கள் கலந்துகொண்டனா். திருவிழா திருப்பலி நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com