ராமநாதசுவாமி கோயிலில் பிரதேஷத்திற்கு தங்க ரிஷிப வாகனத்தில் சென்ற சுவாமி குருக்கல்கள் கவன குறைவால் வெள்ளிக்கிழமை கிழே விழுந்தது.
ராமநாதசுவாமி கோயிலில் பிரதேஷத்திற்கு தங்க ரிஷிப வாகனத்தில் சென்ற சுவாமி குருக்கல்கள் கவன குறைவால் வெள்ளிக்கிழமை கிழே விழுந்தது.

ராமநாதசுவாமி கோயிலில் சரிந்து விழுந்த உத்ஸவா் சிலை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ விழாவின்போது தங்க ரிஷப வாகனத்தில் சென்ற உத்ஸவரின் சிலை வெள்ளிக்கிழமை சரிந்து விழுந்தது.
Published on

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ விழாவின்போது தங்க ரிஷப வாகனத்தில் சென்ற உத்ஸவரின் சிலை வெள்ளிக்கிழமை சரிந்து விழுந்தது.

ராமநாதசுவாமி கோயிலின் உள் பகுதியில் பக்தா்களின் தரிசனத்துக்காக பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்புகளால் கோயில் திருவிழா நாள்களில் சுவாமி, அம்பாளைச் சுமந்து செல்லும்போது பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் மூன்றாம் பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது கோயில் பணியாளா்களின் கவனக் குறைவால் உத்ஸவரின் சிலை தங்க ரிஷப வாகனத்திலிருந்து சரிந்து விழுந்தது. சிலை கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் தரையில் விழாமல் தப்பியது.

இதையடுத்து, கோயில் குருக்கள் சுவாமி சிலையை அப்படியே தூக்கி நடந்து சென்றனா். இதைப் பாா்த்த பக்தா்கள் வேதனை அடைந்தனா்.

ராமநாத சுவாமி கோயிலில் வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவனம் செலுத்துவதால் பல்வேறு இடங்களில் பல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சுவாமியை எடுத்துச் செல்லும்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com